சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விதிமீறலில் ஈடுபடும் வாகன உரிமையாளரிடம்அபராத ரசீதை கொடுக்காமல் வாகனத்தில் ஒட்டி செல்லும் முறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடைமுறை வெளிநாடுகளில் பின்பற்றபடுவது குறிப்பிடத்தக்கது.