Chennai | TN Police | CCTVல் தெரிந்த காட்சி.. சிக்கிய இளைஞர்.. பரபரத்த சென்னை
சென்னை புழல் அருகே, மெட்ரோ பணிகளுக்காக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கான்கிரீட் கலவை லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். லாரிகளை ஏன் இங்கு நிறுத்தியுள்ளீர்கள் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்ட இளைஞர், ஓட்டுநரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பிரவீன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்