சிசிடிவி உதவியோடு 4 பேரை கைது செய்த போலீசார்
சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, மந்தைவெளி, அபிராமபுரம், மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் செல்போன் பறிப்பில் சிலர் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில், ஓட்டேரி, கொடுங்கையூர் பகுதிகளைச் சேர்ந்த வெங்கடேசன், மேகசூர்யா என்ற பேய்க்குழந்தை, சரவணன், மற்றும் 17 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 போன்கள், 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.