தமிழ்நாடு

வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நுங்கம்பாக்கம், காம்தார் நகர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன். விடுமுறை நாட்களையொட்டி தனது குடும்பத்துடன் விஸ்வநாதன் , வட நெம்மேலியில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் வேலைக்காரப் பெண் வேலை முடிந்தவுடன் வீட்டு சாவியை கீழ்தளத்தில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் வீடு திரும்பி வந்து பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் , அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்