தமிழ்நாடு

"உடனே கட்டுங்க.. இல்லனா அபராதம் ஏறிட்டே இருக்கும்" - மக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

தந்தி டிவி

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளை, தேர்தல் பணிகளுக்கு நடுவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. அதன்படி கடந்த ஏப்.1 முதல் 30-ம்தேதி வரை 382 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 கோடி ரூபாய் அதிகம் எனக் கூறப்படுகிறது. கடந்த 30 நாட்களில் 5 லட்சத்து 22 ஆயிரம் பேர் காலத்தோடு சொத்து வரியைச் செலுத்தி 5 சதவீத தள்ளுபடியைப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் சொத்துவரி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பு அரையாண்டுக்குப் பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு ஒவ்வொரு மாதத்துக்கும்ஒரு சதவீதம் தனிவட்டி அபராதமாக விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

TN Assembly | OPS - KAS மாறி மாறி வார்த்தை மோதல் - அனல் பறக்கும் சட்டப்பேரவை

Armstrong Case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மிரட்டல் - வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்

Chennai | Flight | தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானங்கள் சென்னையில் பரபரப்பு

Kaveri River | காவிரி விவகாரம்..நாளை அவசர கூட்டம்

Breaking | Jharkhand Protest | மீண்டும் வெடித்த ஜென்Z போராட்டம் | அதிரடியில் இறங்கிய போலீசார்