தமிழ்நாடு

சென்னையில் டாஸ்மாக் கடைகள் 5 மாதங்களுக்கு பின்னர் நாளை திறப்பு- பீர் பாட்டில்களை அனுப்பும் பணி தீவிரம்

கொரோனோ தொற்று காரணமாக 5 மாதங்களாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.

தந்தி டிவி

கொரோனோ தொற்று காரணமாக 5 மாதங்களாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் நாளை முதல் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோன் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. இங்கு பலவகையான மதுபாட்டில்கள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது. 5 மாதங்களாக கடைகள் மூடப்பட்டு இருந்ததால் காலாவதியான பீர் பாட்டில்கள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், சென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு புதிய பீர் பாட்டில்களை

அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு