தமிழ்நாடு

காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து நெரித்து கொலை...

சென்னை தாம்பரம் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அவரது உறவினரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

தந்தி டிவி

* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுவிடுதி கிராமத்தை சேர்ந்த அகிலா என்ற பெண் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்து வந்தார். அகிலாவிற்கும் அவரது அக்காள் கணவரின் தம்பி சந்தோஷிற்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. சந்தோஷ் தனது அண்ணனுடன் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், காந்தி தெருவில் வசித்து வந்துள்ளார்.

* இந்நிலையில் அகிலா திடீரென சந்தோஷிடம் பேசாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனியாக பேச வேண்டும் என்று அகிலாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை, அகிலா எழுந்திருக்காததால், காரில் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அகிலாவை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்னரே அகிலா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

* இதனையடுத்து சந்தோஷ் அகிலாவின் உறவினர்களுக்கு தொடர்புகொண்டு, அகிலாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், மாடியில் உள்ள கிரில்கேட்டில் இடித்துக் கொண்டதால், அகிலாவின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மறுநாள் காலை அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

* இதனால் சந்தேகமடைந்த அகிலாவின் உறவினர்கள் , சந்தோஷ் தான் அகிலாவை கொலை செய்து இருப்பார் என சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சந்தோஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். எனினும், உறவினர்களிடம் சொன்னதையே போலீசாரிடமும் சந்தோஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், அகிலா கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அகிலாவை காதலித்து வந்ததாகவும், அகிலா வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்து, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் சந்தோஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் சந்தோஷை கைது செய்தனர். காதலிக்க மறுத்த ஒரே காரணத்திற்காக இளம்பெண்ணை அவரது உறவினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?