தமிழ்நாடு

அதிமுக, திமுகவினர் இடையே மோதல் - தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை தாம்பரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை தாம்பரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது. கோட்டாச்சியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அங்கு வந்த அதிமுகவினர் தங்களை அழைக்காமல் எப்படி ஜமாபந்தி நடத்தலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த போது இரண்டு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் நாற்காலிகள தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இதை தொடர்ந்து அதிகாரிகள் ஜமாபந்தி நடத்தாமல் அறைக்கு சென்றனர். பதற்றத்தை தணிக்கும் வகையில் தாம்பரம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்