தமிழ்நாடு

தியாகராயர் நகரில் ரூ. 25 கோடி மதிப்பு நிலம் மீட்பு

சென்னை தியாகராயர் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் மீட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை தியாகராயர் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் மீட்டுள்ளது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் பணியில் தீவிரமாகியுள்ள மாநகராட்சி நிர்வாகம், தியாகராயர் நகர் ராமன் தெருவில், ஆக்கிரமிப்பில் இருந்த எட்டரை கிரவுண்ட் நிலத்தை மீட்டுள்ளது. தியாகராயர் நகர் லேடிஸ் கிளப் என்ற பெயரில் 40 வருடங்களுக்கு முன் குத்தகைக்கு எடுத்ததாகவும், ஆனால் குத்தகை காலம் முடிந்து 15 ஆண்டுகள் ஆன போதிலும் மாநகராட்சி வசம் ஒப்படைக்காமல் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நிலத்தை மீட்ட அதிகாரிகள், அலுவலகம் மற்றும் வாயில் கதவை பூட்டி சீல் வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்