தமிழ்நாடு

சென்னையில் போட்டோ ஸ்டுடியோ அதிபரிடம் ரூ. 2 கோடி மோசடி - ரியல் எஸ்டேட் அதிபர் கைது

சென்னையில் போட்டோ ஸ்டுடியோ அதிபரிடம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ராபர்ட் நிர்மல் சிங் ஸ்டுடியோ நடத்தி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வீடியோ, போட்டோ ஆல்பம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம், சாம்ராஜ் என்பவர், ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் பணியை செய்த சாம்ராஜ் அதனை, ரியல்எஸ்டேட் அதிபர் சதீஷிடம் கொடுத்து வந்துள்ளார். இது போல் 2 கோடி ரூபாய் வரை, மோசடி செய்யப்பட்டதால், ராபர்ட் நிர்மல் சிங் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரியல் எஸ்டேட் அதிபர் சதீஷை கைது செய்தனர். தலைமறைவான சாம்ராஜை தேடி வருகின்றனர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு