தமிழ்நாடு

'போலீஸ்' ஸ்டிக்கர் ஒட்டியிருந்த 421 பேருக்கு அபராதம் விதிப்பு

தந்தி டிவி

சென்னையில் வாகன பதிவெண் பலகையில், போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்த 421 வாகன ஓட்டிகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும், சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபடுவோர் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, தங்கள் வாகனங்களில் போலீஸ், ஊடகம், தலைமைச் செயலகம், டி.என்.இ.பி. என வெவ்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு ஏமாற்றுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாகனங்களை சோதனை செய்ய சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக, சென்னையில் 64 இடங்களில், போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இந்தச் சோதனையில், 421 வாகன ஓட்டிகள் சிக்கினர். அவர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்த போலீசார், வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை அகற்றினர். மீண்டும் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும், வாகன உரிமையாளர்கள், தங்கள் வாகன பதிவெண் பலகையில், பதிவு எண்ணைத் தவிர தேவையற்ற எந்த ஸ்டிக்கரையும் ஒட்டக் கூடாது என்றும் போலீசார் எச்சரித்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்