தமிழ்நாடு

கோவேக்சின் கொரோனா தடுப்பு மருந்து 3-ஆம் கட்ட பரிசோதனை இன்று தொடக்கம்

சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் கோவேக்சின், கொரோனா தடுப்பு மருந்தின் 3-ஆம் கட்ட பரிசோதனை இன்று தொடங்கப்பட உள்ளது.

தந்தி டிவி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உள்ளன. இந்த மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்ய, இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்களத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் தேர்வானது. இதனைத் தொடர்ந்து, அங்கு 30 தன்னார்வலர்களை கொண்டு முதற்கட்ட பரிசோதனை கடந்த ஜூலை மாதம் நடந்தது. மேலும் 50 தன்னார்வலர்கள் கொண்டு 2-ஆம் கட்ட பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த 2 பரிசோதனைகளும் வெற்றி பெற்ற நிலையில், 3-ஆம் கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது.

BREAKING || சுந்தர்.சி-ன் சொத்து விவரங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Nomination | ECI | TN Election | சூடுபிடித்த தேர்தல் களம் - "இன்னும் ஒரு நாள் மட்டுமே.."

BREAKING || "போட்டியா? இல்லையா?" கடைசி நேரத்தில் திடீர் யோசனையில் திருமா

Breaking | Central Minister | முதல்வர் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

BJP Annamalai | PM Modi | "அண்ணாமலை டீமே முழுசா இல்ல" - பகீர் கிளப்பிய தாமோதரன் பிரகாஷ்