சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னணி பாடகர், எஸ்.பி பாலசுப்ரமணியம், இசையுலகில் நீடிக்கும் தனது ஐம்பது வருடத்திற்கும் மேலான வெற்றிப்பயணம் குறித்து பேசினார். தன்னிடம் உள்ள குறைகள் தனக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்த எஸ்.பி.பி., அதைத்தான் தனது தகுதியாக இன்று வரை கருதுவதாகவும் கூறினார்.