தமிழ்நாடு

சென்னையில் "ஸ்மார்ட் கம்பங்கள்" அமைக்கும் பணி துவக்கம் - ஸ்மார்ட் கம்பிகளின் சிறப்பு அம்சங்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தந்தி டிவி

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகமாக கூடும் மெரினா, பெசன்ட் நகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கம்பங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.

குற்றச்செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் 360 டிகிரி சுழன்று கண்காணிக்கக் கூடிய கேமிரா மற்றும் மழைமானி, எந்தெந்த பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள், இந்த ஸ்மார்ட் கம்பத்தில் இருப்பதாக கூறுகிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்....

நடைபாதைகளை யாரேனும் ஆக்கிரமித்தால் இந்த ஸ்மார்ட் கம்பங்கள் தானியங்கியாக செயல்பட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் எனவும் அவர் கூறுகிறார்.

இதன் மூலம் மாநகராட்சிக்கு ஏற்படக்கூடிய செலவுகளும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முதற்கட்டமாக சென்னையில் 50 இடங்களில் இந்த ஸ்மார்ட் கம்பங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும், விரைவில் 15 மண்டலங்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்