தமிழ்நாடு

ரோபோக்கள் மூலம் செடிகள் நட்டு மாணவர்கள் புதிய உலக சாதனை

ரோபோ மூலம் செடிகளை நட்டு புதிய உலக சாதனை முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனியார் ரோபோட்டிக் பயிற்சி மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் ரோபாட்டிக்ஸ் பயிற்சி பெற்ற ஏழு வயது முதல் 17 வயதிலான 326 சிறுவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், தங்கள் கைகளால் உருவாக்கப்பட்ட ரோபோக்களின் உதவியுடன் மரக்கன்றுகளை சிறுவர்கள் நட்டனர். உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே நிகழ்ச்சியில் பங்கேற்றதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பல புதிய சாதனங்களையும் ரோபோக்களையும் கண்டுபிடிக்க ஆர்வமாக உள்ளதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர். ரோபோட்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டது இதுவே முதல்முறைய என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC