சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கும்படி, அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2 மாதமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள முடிதிருத்த தொழிலாளர்களுக்கு தலா 30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், சென்னையில் கள நிலவரத்தை ஆய்வு செய்து சலூன் கடைகளை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி, ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.