தமிழ்நாடு

சேலம் ரயில் கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்

ஓடும் ரயிலில் ஐந்தே முக்கால் கோடி ரூபாயை கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டவர்கள், வடமாநில ரயில்களில் ஏற்கனவே ஒத்திகை பார்த்ததாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தந்தி டிவி

* கடந்த 2016 ஆம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஐந்தே முக்கால் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

* 2 ஆண்டு தீவிர விசாரணைக்கு பின் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மோஹர்சிங், கிருஷ்ணா, மகேஷ்பாரதி, மோகன் உள்ளிட்ட 7 பேரை

போலீசார் கைது செய்தனர்.

* அவர்கள் ஓடும் ரயிலில் ஐந்தே முக்கால் கோடி ரூபாயை கொள்ளையடிப்பதற்கு முன்பாக, வடமாநில ரயில்களில் பலமுறை ஏற்கனவே ஒத்திகை பார்த்ததாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

* அப்போது ரயிலின் மேற்கூரையின் கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து , மேற்கூரையை எந்த கருவிகள் மூலம் உடைக்க முடியும் என்பது குறித்து பலமுறை ஆலோசித்ததாகவும் கொள்ளையர்கள் தெரிவித்த்தாக கூறப்படுகிறது.

* அதன் பின்னரே தமிழகம் வந்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும், இந்த கொள்ளை சம்பவத்தின் போது சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை ரயில் பாதை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

* அந்த இடத்தில் ரயில் 50 கிலோ மீட்டருக்கு குறைவான வேகத்தில் ரயில் சென்றதால் தங்களுக்கு சாதகமாக போனதாகவும் கொள்ளையர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

* கொள்ளையர்கள் பல தகவல்களை சொன்னாலும் அதற்கான தடயங்கள் குறித்த எந்த தகவலும் பெறமுடியவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் சிதைந்த அல்லது முழுமை பெறாத கையெழுத்து ரேகைகளே பதிவாகி உள்ளதாக கைரேகை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகளா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் ஆதாரங்களை வைத்து தான் கொள்ளையர்களை கைது செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

* இதனிடையே கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் 5 பேரை நேற்று விருத்தாசலம், சின்னசேலம், சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

* அப்போது கொள்ளையடித்தது எப்படி என்று கொள்ளையர்கள் நடித்து காட்டினார். அதை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

* 13 நாள் விசாரணைக்கு பின் கொள்ளையர்களை நாளை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி