தமிழ்நாடு

தனிப்படையினரால் மீட்கப்பட்ட செல்போன்கள் : 108 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னை ராயப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் மைலாப்பூர் காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் 108 செல்போன்கள் தனிப்படையினரால் மீட்கப்பட்டு உள்ளன.

தந்தி டிவி

சென்னை ராயப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் மைலாப்பூர் காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் 108 செல்போன்கள் தனிப்படையினரால் மீட்கப்பட்டு உள்ளன. சில செல்போன்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளன. மைலாப்பூர் பாரதி வித்யாலயாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மைலாப்பூர் உதவி ஆணையர் ரமேஷ், ராயப்பேட்டை உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் ஆகியோர் பங்குபெற்று செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். செல்போன் திருட்டை தவிர்க்க சில அறிவுரைகளையும் அப்போது உதவி ஆணையர்கள் வழங்கினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்