சென்னை, காசிமேட்டில் அரங்கேறிய இந்த கொலை சம்பவத்தில், அதே பகுதியை சேர்ந்தவரும் பிரபல ரவுடியுமான 24 வயது இளைஞர் வெங்கட்ராமன் படுகொலை செய்யப்பட்டார். வெங்கட்ராமன் மீது 9 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திடீரென இவர் மர்மகும்பலால் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது காசிமேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், இளைஞர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.