சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி சுதாகர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.கடந்த 14-ம் தேதி சுதாகர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.