தமிழ்நாடு

ஆபாச செயலியால் பணத்தை இழந்த இளைஞர்

ஆபாச செயலியில் இழந்த பணத்தை மீட்க சென்ற இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம், தங்க சங்கிலியை பறித்து சென்ற மோசடி கும்பலை சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வருகிறார். இவர் லோகாண்டோ என்கிற டேட்டிங் செயலி மூலம் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கட்டி ஒரு பெண்ணிடம் பேசி வந்துள்ளார். நெருக்கமாக பேசிய அந்த பெண், இரண்டு தவணையாக 18 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளார். பின்னர் இளம்பெண் போனில் பேசாததால், வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்து பணத்தை திரும்ப பெற சுதர்சன் முயற்சி செய்துள்ளார். இதனிடையே ஈக்காட்டுத்தாங்கல் காசி திரையரங்கம் அருகே நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அந்த இளம்பெண் கூறியுள்ளார். பணத்தை பெற சுதர்சன் சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு இரு சக்கர வாகனம், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதர்சன் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், 4 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு