தமிழ்நாடு

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில், விடிய விடிய இடி - மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.

தந்தி டிவி

ராசிபுரம் : கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிபேட்டை, பட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் திடீரென கனமழை பெய்தது. சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக விடாது பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானல் : 2 மணி நேரம் மழை - மக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் கடந்த ஒருவாரமாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் அரை மணிநேரம் கன மழை கொட்டித்தீர்த்தது. மழை காரணமாக உருளை ,கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் : அரைமணி நேரம் பெய்த மழை - மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் அரைமணி நேரம் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்