சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நள்ளிரவு முதல் சென்னை மாநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேகமூட்டம் காரணமாக சூரியன் மறைந்து இருள் சூழ்ந்ததால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா கடற்கரை சாலை என சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஏறிய விட்டவாறு பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.