தமிழ்நாடு

Chennai புழல் சிறை கைதி திடீர் மரணம் -உடலை பார்த்து கதறி அழும் தாய்..போலீசுடன் செல்லும் வீடியோ வைரல்

Chennai புழல் சிறை கைதி திடீர் மரணம் -உடலை பார்த்து கதறி அழும் தாய்..போலீசுடன் செல்லும் வீடியோ வைரல்

thanthitv

புழல் சிறை கைதி திடீர் மரணம் - உடலை பார்த்து கதறி அழும் தாய்... போலீசுடன் செல்லும் வீடியோ வைரல் புழல் சிறையில் படுகாயமடைந்த கைதி ஒருவர், சிகிச்சையில் உயிரிழந்த நிலையில், போலீசார் மீது அவரது குடும்பத்தார் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தாம்பரம் அருகே கடப்பேரி பகுதியைச் சேர்ந்த புனிதன் என்பவர், கடந்த 2020ஆம் ஆண்டு சங்கர் நகர் பகுதியில் நடந்த தகராறு வழக்கில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. அந்த வழக்கு தொடர்பாக நிலுவையில் இருந்த பிடியாணையின் காரணமாக, ஏழு நாட்களுக்கு முன்பு போலீசார் அவரை வீட்டின் அருகே கைது செய்து அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், புனிதனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக குற்றச்சாட்டும் அவரது தாய், காவல் துறையினரின் துன்புறுத்தலே மரணத்திற்குக் காரணம் என குற்றம்சாட்டி, தாம்பரம் காவல் நிலையத்தில் கதறி அழுது முறையிட்டார். மருத்துவமனை வளாகத்திலும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், புனிதனை இருசக்கர வாகனத்தில் போலீசார் அழைத்துச் செல்லும் காணொளி காட்சிகளும் வெளியாகி சர்ச்சையை அதிகரித்துள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே