சென்னை தி.நகர் எம். எச் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் குமார் பரிமளா தம்பதியினர். இவர்களின் ஒன்றரை வயது குழந்தை பரத், பால்கனியில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென்று கீழே விழுந்தான். இதனை பார்த்தவர்கள், குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரத்தின் இடது புருவத்தின் மேல் ரத்த காயம் ஏற்பட்டதால் 3 தையல்கள் போடப்பட்டன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பாண்டிபஜார் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த குழந்தை சிறு காயத்துடன் தப்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது