சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். பட்டினப்பாக்கத்தை சேர்ந்த 33 வயதான அந்த மருத்துவருக்கு கடந்த 30 ஆம் தேதி நோய்தொற்று உறுதியானது. தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில், கொரோனா நோயாளிகளை தகனம் செய்ய வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவரின் உடலை மயிலாப்பூர் இடுகாட்டில் தகனம் செய்தனர்.