கடந்த காலத்தில் வறட்சியால் வறண்டு போன இந்த ஏரிக்கு கடந்த 18-ஆம் தேதி பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீரின் வரத்தாலும் பூண்டி ஏரியில் நீர் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் நீர்வரத்து விநாடிக்கு 557 கன அடியாகவும், நீர் இருப்பு 553 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது.