தமிழ்நாடு

சென்னை-பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் ஆய்வாளர்

சென்னையில் சாலையில் விழுந்து கிடந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் காவல் ஆய்வாளர் பிரசவம் பார்த்த சம்பவம் அரங்கேறியது.

தந்தி டிவி

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பானுமதி. இவரது கணவர் இரவு வேலைக்கு சென்ற நிலையில், அதிகால 03:00மணிக்கு பானுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் தானே நடந்து ஆட்டோ பிடிப்பதற்காக சூளைமேடு நெடுஞ்சாலைக்கு வந்துள்ளார். ஆனால் அப்போது பனிக்குடம் உடைந்ததால் நிலை தடுமாறி பானுமதி சாலையில் கீழேவிழுந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சித்ரா குப்பை சேகரிக்கும் மூதாட்டியும் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர். ஆண் குழந்தை பிறந்த பிறகு ஆம்புலன்ஸ் வரவழைத்து பானுமதியையும் குழந்தையையும் காவல் ஆய்வாளர் அனுப்பி வைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்