தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 2 காவலர்களுக்கு, கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பணியில் இருந்த 60-க்கும் மேற்பட்டோர்க்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 28 வயதுடைய ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 உயர்ந்தது. தற்போது அந்த காவலர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோன்று கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 55 வயதுடைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இரு நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அடிப்படையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோன்று, மாங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 56 வயது உதவி ஆய்வாளருக்கும், புதுப்பேட்டை கட்டுப்படுத்துதல் மையத்தில் பாதுகாப்பு பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்