தமிழ்நாடு

சென்னை : புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோலின் விலை..!

சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லிட்டருக்கு 82 ரூபாய் 24 காசுகளாக விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி 80 ரூபாய் 69 காசாகவும், ஆகஸ்ட் 29ஆம் தேதி 81 ரூபாய் 22 காசாகவும், நேற்று 81 ரூபாய் 92 பைசாவாகவும் தொடர்ந்து அதிகரித்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 23 பைசா அதிகரித்துள்ளது.

இதேபோல், டீசல் விலையும் தொடர்ந்து உச்சத்தை கண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி லிட்டர் ஒன்றுக்கு 73 ரூபாய் எட்டு பைசாவாக இருந்த விலை, நேற்று 74 ரூபாய் 77 பைசாவாக அதிகரித்தது.

இதன்மூலம் 10 நாட்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 69 பைசாவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு அதிகபட்சமாக 32 காசுகள் அதிகரித்து, 82 ரூபாய் 24 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலையும் 42 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 75 ரூபாய் 19 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், வாடகை வாகனங்கள் ஓட்டுவோரும், வாடிக்கையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், காய்கறி, உணவு பண்டங்களின் விலை உட்பட விலைவாசியும் கணிசமாக உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்