தமிழ்நாடு

சென்னை பல்லாவரம் அருகே எம்.ஜி.ஆர் சிலை அகற்றம் - அதிமுகவினர் எதிர்ப்பு

சென்னை பல்லாவரம் அருகே நீதிமன்ற உத்தரவின்படி எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்டது.

தந்தி டிவி

சென்னை பல்லாவரம் அருகே நீதிமன்ற உத்தரவின்படி எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பொழிச்சலூர் மெயின் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர் சிலையானது, இடையூறாக இருப்பதாக கூறி,கட்டிட உரிமையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து அந்த சிலையை அகற்ற வருவாய்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வருவாய்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த சிலையை அகற்ற வந்தனர். அப்போது, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் மாற்று இடம் அளிப்பதாக கூறி அவர்களை சமாதானபடுத்தி எம்ஜிஆர் சிலையை கிரேன் மூலம் அகற்றினர். தொடர்ந்து, பொழிச்சலூர் பால் பூத் அருகே இடம் ஒதுக்கப்பட்டு, புதிய இடத்தில் எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்