தமிழ்நாடு

இறுதியில் கணவன் கல்லறை அருகே ஒன்றாக சேர்ந்த காதலி சர்மிளா

தந்தி டிவி

உடற்கூராய்வு சோதனை முடிந்து சர்மிளாவின் உடலை பெற்ற உறவினர்கள், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட அவரின் கணவர் கல்லறை அருகே சர்மிளாவையும் அடக்கம் செய்தனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்ததால், சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர், பெண் வீட்டாரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதனால், மன உளைச்சலில் இருந்த பிரவீனின் மனைவி சர்மிளாவும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெண்ணின் பிரேத பரிசோதனை முடிந்து சர்மிளாவின் உடலை பெற்ற உறவினர்கள், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட அவரது கணவர் பிரவீனின் கல்லறை அருகே சர்மிளாவையும் அடக்கம் செய்தனர். பள்ளிக்கரணையில் நடந்த இந்த இறுதி சடங்கு நிகழ்வு, உயிரிழந்த தம்பதி இருவரின் நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்