தமிழ்நாடு

ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி- அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்

தந்தி டிவி

சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஹரிஹரன் என்பவர், ஆன்லைன் மூலம் தனியார் உணவகத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை திறந்து பார்த்தபோது, கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, அந்த ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் வாடிக்கையாளர் குறைகளை கூறும் மெசேஞ்சரில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதற்காக அந்த நிறுவனம், உணவுக்கான தொகையை திருப்பி அனுப்புவதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஹரிஹரன் அந்த தனியார் உணவகத்திற்கு சென்று இதுகுறித்து கேட்டபோது, கவுண்டரில் இருந்தவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனிடையே, தனியார் உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹரிஹரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு