தமிழ்நாடு

Chennai | OMR | சென்னையில் அதிர்ச்சி.. குறுக்கே வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்.. OMRல் பரபரப்பு

Chennai | OMR | சென்னையில் அதிர்ச்சி.. குறுக்கே வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்.. OMRல் பரபரப்பு

thanthitv

Chennai | OMR | சென்னையில் அதிர்ச்சி.. குறுக்கே வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்.. OMRல் பரபரப்பு சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில், அரசு மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேடவாக்கம் இணைப்பு சாலையான செம்மொழி சாலையில் சென்ற போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. மெட்ரோ பணிக்காக சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சாலைகள் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க, அரசு பேருந்தை ஓட்டுநர் இடதுபுறம் திரும்பவே, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த சதுப்பு நில பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில், ஓட்டுநர், நடத்துனர் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் மேடவாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பள்ளத்தில் விழுந்த பேருந்தை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்