தமிழ்நாடு

இரவில் திடீரென கடைகளை இடிக்க வந்த அதிகாரிகள்...கொந்தளித்த வியாபாரிகள் - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னையில் கடைகளை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை எண்ணூரில் உள்ள பழமையான நூலகத்திற்கு பின்புறம், அரசு சார்பில் சந்தை கட்டப்பட்டு வருகிறது. அதற்கு நுழைவு வாயில் வேண்டும் என்பதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் திடீரென அங்குள்ள கடைகளை அகற்ற இரவில் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் கடை நடத்தி வருவதாகவும், எந்த முன்னறிவிப்பும் இன்றி கடைகளை இடிக்க வந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இதனால் கடைகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நூலகம் மட்டும் அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா