தமிழ்நாடு

சென்னை : காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தை இஸ்லாமியர்கள் இரவு 11 மணி அளவில் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெருவில், கடை வைத்து இருக்கும் வடமாநிலத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் NRC மற்றும் CAA-சட்டத்தை ஆதரித்து பேனாவில் அச்சடித்து வினியோகம் செய்துள்ளார். அதை, அப்பகுதியின் இஸ்லாமிய வியாபாரிகள் கண்டித்ததாக வந்த புகாரில் 4 பேரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதனால் அதிருப்தி அடைந்த இஸ்லாமிய இளைஞர்கள் இருவர், கடையின் மீது முட்டைகளை வீசியதாக கூறப்படுகிறது. அவர்களையும் பிடித்து சென்ற போலீஸார், மொத்த 6 பேரை சிந்தாதிரிபேட்டை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த தகவல் பரவியதும் இஸ்லாமிய அமைப்புகளின் தொண்டர்கள், பொது மக்கள், மாணவர் அமைப்பினர் என 2000 பேர், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரை விடுவிக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினார். பதற்றமான சூழல் ஏற்பட்டதால், துணை ஆணையர் தர்மராஜன் சம்பவ இடத்திற்கு சென்று, இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து 6 பேரையும் காவல் துறை விடுவித்தது. அதன் பின்னர், அங்கிருந்த கூட்டம் கலைந்து சென்றது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை