#Chennai #Murder #Puzhal #Crime #TNPolice #ThanthiTV Chennai Murder | புழல் ஏரியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடல் - நண்பர்களே செய்த ரணகொடூர செயல்.. சென்னையில் அதிர்ச்சி சென்னை அம்பத்தூர் அருகே, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல் புழல் ஏரியில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னை சத்தியா நகர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தபோது, முகுந்தனுக்கும், திருமலை மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த திருமலை, மறைத்து வைத்திருந்த கத்தியால் முகுந்தனை சரமாரியாக வெட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் உடலை எரிக்க முயன்ற மூவரும், முழுமையாக எரிக்க முடியாததால் உடலை புழல் ஏரியில் வீசிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத சடலத்தை பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் மீட்டனர். விசாரணையில் முக்கிய குற்றவாளி திருமலை என்கிற சஞ்சய் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது