தமிழ்நாடு

சென்னையில் உருவாகும் பிரமாண்டம் - "95% பணிகள் நிறைவு"

தந்தி டிவி

சென்னையில் உருவாகும் பிரமாண்டம் - "95% பணிகள் நிறைவு"

முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் 95 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். கொளத்தூரில் முதல்வர் படைப்பகத்தின் முன்னேற்பாடு பணிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தில் 95 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளதாகவும், விரைவில் முதலமைச்சர் அந்த பேருந்து நிலையத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், வரும் மார்ச் மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்றும், பெரியார் நகர் பேருந்து நிலையம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் 18 புதிய பேருந்து நிலையங்கள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் குறிப்பிட்டார். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 79 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளதாகவும், 7 முருகர் கோயிலில் பெருந்திட்ட வரைவு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்