தமிழ்நாடு

Chennai | MRTS | ஹாட்ஸ்பாட்-ஆக மாறும் பரங்கிமலை | ஒரு நாளில் இத்தனை பேர் பயணமா?

Chennai | MRTS | ஹாட்ஸ்பாட்-ஆக மாறும் பரங்கிமலை | ஒரு நாளில் இத்தனை பேர் பயணமா?

thanthitv

Chennai | MRTS | St. Thomas Mount | ஹாட்ஸ்பாட்-ஆக மாறும் பரங்கிமலை | ஒரு நாளில் இத்தனை பேர் பயணமா?

ஒன்றரை மாதங்களிலேயே பயணிகள் எண்ணிக்கை நாளொன்றுக்கு 28,000ஆக உயர்வு வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் மக்களின் பயண நேரம் குறைப்பு மெட்ரோ, புறநகர், பறக்கும் ரயில் என 3 சேவைகளும் இணையும் முக்கிய மையம் பரங்கிமலை இந்த ஆண்டு இறுதிக்குள் பயணிகள் எண்ணிக்கை 30,0000ஐக் கடக்கும் என எதிர்பார்ப்பு பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணிகள்-இறுதிக்கட்டம் 17 ஆண்டு கால நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கப்பட்ட வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை தென் சென்னை மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இச்சேவை தொடங்கப்பட்ட ஒன்றரை மாதங்களிலேயே பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதிலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதிலும் இந்த ரயில் பாதை முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது மெட்ரோ, புறநகர் மற்றும் பறக்கும் ரயில் என 3 சேவைகளும் இணையும் முக்கிய மையமாகப் பரங்கிமலை மாறியுள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் பயணிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், வரும் காலங்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்தச் சேவை மேலும் வளர்ச்சியடையும் எனத் தெரிகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்