சென்னை வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் இடையே ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை இருப்பு பாதை போலீசார் கைது செய்தனர். பயணிகளின் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட திரு.வி.க நகரை சேர்ந்த பிரவீன், சுகுனேஷை கைது செய்தனர். விசாரணையில் பெரிய அளவிலான கொம்பு ஒன்றை வைத்து பயணிகளின் செல்போனை தட்டிப்பறித்தது தெரிய வந்தது.