தமிழ்நாடு

Chennai Metro | சென்னை மக்களுக்கு இனி கொண்டாட்டம் தான்

சென்னை மக்களுக்கு இனி கொண்டாட்டம் தான்

thanthitv

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4-ல் ஆய்வு நிறைவு சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தில் வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மேற்கொண்ட 2 நாட்கள் ஆய்வு நிறைவு பெற்றுள்ளது. மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி, மற்றும் அவரது குழுவினர், 2ம் கட்டத் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் அய்யப்பன்தாங்கல் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ நிலையம் வரை மொத்தம் 11 மெட்ரோ நிலையங்கள் உட்பட 8.50 கிலோமீட்டர் தூரம் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 2 நாட்களாக மின்சாரம், தண்டவாளம் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த பல்வேறு கட்டமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மெட்ரோ ரயிலை அதிவேகத்தில் இயக்கும் சோதனை பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு