சென்னை மாநகராட்சியின் MEGA STREET திட்டத்தை, அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் MEGA STREET என்ற பெயரில் மாநகரின் பல இடங்களில் சாலை சீரமைத்தல் தொடர்பான பணிகள் துவக்க விழா, சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தலைமைச்செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். திட்டத்தை துவக்கி வைத்த பின் பேசிய அமைச்சர் வேலுமணி, இந்த திட்டம் மூலம், பாதசாரிகளுக்கு தொடர்ச்சியான நடைபாதைகள், இருக்கை, வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.