மெரினா, பெசண்ட் நகர் கடற்கரை சாலைகளில் போலீசார் எச்சரிக்கையையும் மீறி, இளைஞர்கள் பலர் தொடர்ந்து பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பெசண்ட் நகர் கடற்கரை சாலையில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிக ஒலி எழுப்பியபடி சாகசம் செய்துள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர் தலைகுப்புற விழுந்து காயமடைந்தார். பொதுமக்களுக்கு இடையூறு செய்த அவருக்கு உதவி செய்ய சாலையோரத்தில் இருந்த யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.