சென்னையிலிருந்து 40 பயணிகளுடன் மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஒன்று இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து போயின. பேருந்து, டேங்கர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் ஒரு பயணி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 12 பயணிகளை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரேன் மூலம் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து
சரிசெய்யப்பட்டது.