தமிழ்நாடு

காதலனை ஆள் வைத்து கடத்திய காதலி..

நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி மிரட்டி வந்த காதலனை, காதலியே ஆள் வைத்து கடத்தி அடித்து உதைத்த சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது.

தந்தி டிவி

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர், நவீத் அகமது. அமெரிக்கா வாழ் இந்திய இளம்பெண் ஒருவரும், நவீத்தும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன், படம் பார்த்து விட்டு, தனது என்.ஆர்.ஐ. காதலியை சேத்துப்பட்டில் உள்ள அவரது குடியிருப்பில் இறக்கி விட்டு திரும்பிய நவீத் அகமதுவை, மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. கத்திபாரா பாலத்துக்கு கீழே நவீத் அகமதுவை அந்தக் கும்பல் அடித்து உதைத்துள்ளது. உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என அவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால் பணம் இல்லை என்று நவீத் அகமது கூறியதும், அவரது செல்போனை றித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பி ஓடியுள்ளது.

இதுதொடர்பாக டி.பி. சத்திரம் காவல்நிலையத்தில் நவீத் அகமது புகார் அளித்தார். மர்மநபர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை போலீசிடம் நவீத் கூறவே, அதை வைத்து மூன்று பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர், சரவணன் மற்றும் லெனின் ஆகியோர் தான் நவீத்தை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. லெனின் தப்பிய நிலையில் மற்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நவீத்தைக் கடத்தச் சொன்னதே, அவரது அமெரிக்க காதலி தான் என்ற தகவலை கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.

காதலன் நவீத், அடிக்கடி தகராறு செய்வதாகவும், தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகவும் அமெரிக்க பெண் கூறியிருக்கிறார். எனவே செல்போனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கடத்திச் சென்றதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்க பெண்ணிடமும் நடத்திய விசாரணையில் இது உறுதிபடுத்தப்பட்டது.

இதில் தலைமறைவாக இருக்கும் லெனின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் பாஸ்கர் என்பவர், வடபழனி மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் மகன் என்பதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போலீசார் வைத்திருந்த தடுப்புகளை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற கும்பலிலும் இவர் இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. காதலனின் செல்போனை பறிக்க, காதலியே அவரை ஆள் வைத்து கடத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி