தமிழ்நாடு

சென்னையில் நொடியில் இளைஞர் உயிரை பறித்த `போட்டோ' - பயத்தில் மக்கள்

தந்தி டிவி

மாங்காடு அடுத்த சுபஸ்ரீ நகரை சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்றுள்ள நிலையில், ஆன்-லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெருவாரியான பணத்தை சீனிவாசன் இழந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் ஆப் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற சீனிவாசன், பணத்தை திருப்பி செலுத்திய பின்னரும் ஆப் நிறுவனத்தினரின் நெருக்கடிக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, சீனிவாசனின் புகைப்படத்தை லோன் ஆப் நிறுவனத்தினர் ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்படும் நிலையில், இதனால் மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீனிவாசனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்