தமிழ்நாடு

கால்டாக்சி டிரைவர் மீது சரமாரி தாக்குதல் - பணம், செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்கள்

சென்னை கோயம்பேடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.எம்.டி.ஏ பகுதியில், தமிழ்ச்செல்வன் என்பவர் கால்டாக்சி ஓட்டி வந்த போது, 2 இளைஞர்கள் அவரை சவாரிக்கு அழைத்துள்ளனர். ஆனால், செல்போன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே, சவாரி ஏற்கப்படும் என்று தமிழ்ச்செல்வன் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தமிழ்ச்செல்வனை வழிமறித்து தாக்கியதுடன் அவரிடம் இருந்த 4 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் அடிப்படையில், கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் பலபேர் கண்முன்னே நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு