தமிழ்நாடு

சென்னையில் கைது செய்யப்பட்ட கந்துவட்டிக்காரர் : ஜாமின் வழங்கிய கேரள நீதிமன்றம் - போலீஸ் அதிர்ச்சி

கந்துவட்டி வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட மகாராஜனை கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது.

தந்தி டிவி
சென்னையில் மகாராஜனை கைது செய்த போது அவரது உறவினர்களும், நண்பர்களும் கேரளா போலீசாருடன் கைலப்பில் ஈடுபட்டதால் அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதுதொடர்பாக 30 பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கேரளா நீதிமன்றத்தில் மகாராஜனை போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால், மகாராஜனுக்கு ஜாமின் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் போராட்டத்திற்கு இடையே பிடிபட்ட மகாராஜனை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்ததால் கேரள போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்