தமிழ்நாடு

கல்பாக்கம் அருகே புதிய தொழில்நுட்பத்தில் முதல் தடுப்பணை : ஐஐடி உதவியுடன் கட்டி முடிப்பு

சென்னை ஐஐடி உதவியுடன் புதிய தொழில் நுட்பத்தில் ஆன முதல் தடுப்பணையை, கல்பாக்கம் அருகே 6 மாதங்களில் கட்டி முடித்து, பொதுப்பணித்துறை சாதனை படைத்துள்ளது.

தந்தி டிவி

கல்பாக்கம் அருகே வாயலூர் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பொதுப்பணித் துறை திட்டமிட்டது. இதற்காக 82 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்நிலையில், ஐஐடி பேராசிரியர் சுந்தரவடிவேலு தலைமையிலான நிபுணர்கள், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தடுப்பணை கட்ட பரிந்துரை செய்து, அதற்கான வடிவமைப்பையும் உருவாக்கி பொதுப்பணித்துறைக்கு அளித்தனர். புதிய தொழில் நுட்பத்தின்படி, ஆற்றின் மேல் பகுதியில் ஒன்றரை மீட்டர் உயரமும், ஆற்றின் தரைப் பகுதிக்கு கீழே 7.5 மீட்டர் அளவிற்கு கான்க்ரீட் தளம் உருவாக்கப்பட்டது. மேலும், கடல் நீர் ஆற்றுக்குள் புகாதவாறு ஒரு தடுப்பும் கட்டப்பட்டுள்ளது. இந்த வகையிலான தடுப்பணை மூலம், ஆற்றின் மேற்பரப்பில் ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் சேமிக்கலாம் என பேராசிரியர் சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளார். இந்த தடுப்பணை 82 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டு 32 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு