சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட நிலையில் முதல் கட்டமாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஐஐடி பேராசிரியர்கள், பாத்திமாவின் தோழிகள், பெற்றோர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வழக்கை முதல் கட்டமாக விசாரித்த கோட்டூர்புரம் போலீசாரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அனைத்து தரப்பு விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு தரப்பு தெரிவித்துள்ளது.